gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெற்றி--வாய்ப்பு தேர்வு செய்வதில்!
அந்த நாட்டின் வெற்றிக்காக பாடுபட்ட இரண்டு இளைஞர்களை அரசன் பாராட்டி பரிசளிக்க விரும்பினார். அவர்கள் விருப்பத்தினைக் கேட்டபோது முதல்வன் தானும் தன் குடும்பமும் வாழ வசதியான வீடு, வாகனம், வசதிகள் கேட்க மனமுவந்து அரசன் அளித்தான்.
இரண்டாமவன் அரசே இனிவரும் நாளில் வாரத்தில் ஒருநாள் என் இல்லத்தில் மதிய உணவை என்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்றான். அதற்கும் சம்மதித்தார். முதல் வாரம் வீரன் வீட்டிற்கு மதிய உணவு உண்ணச்சென்ற மன்னன் அவன் வீட்டுச் சூழலைப் பார்த்து படிப்படியாக தானே வேண்டிய வசதிகளைச் செய்தார். சில வாரத்தில் உணவு உண்டபின் சிறிது கண்ணயர நினைத்தவர் தான் அங்கு தங்கும் வகையில் வேண்டியன எல்லாம் செய்தார். இப்படியாக அவனிருந்த இடம், அவனின் வசதி வாய்ப்புகள் எல்லாம் மேனிலை அடைந்தன. மன்னைன் தொடர் வரவு அவனை ஓர் முக்கியமானவனாக ஆக்கியது. மன்னர் அவனை ஓர் சிற்றரசன் ஆக்கியவர் அவன் குணத்திலும் பண்பிலும் மயங்கி தன் மகளை மணமுடித்து வைத்தார்.
வாய்ப்பை பயன் படுத்திய தேர்வு செய்த விதத்தில் அதன் முழுமையான வெற்றி அடங்கும்.

கோபம்-ஞானம்- ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது!
கடும் தவம் செய்து கொண்டிருந்த விஸ்வாமித்திரருக்கு தான் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்டோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்தது. அதை எப்படி அறிந்து கொள்வது? விசுவாமித்திரர் தன் தவத்தை நிறுத்தினார். முதலில் பரிசோதனை. பின்னர் தவம் என முடிவெடுத்தார். வசிஷ்டரைப் பார்க்கப் போனார்.
நம்மை விட வயதில் மூத்தவர்களை வணங்கினால் அவர்கள் ஆசி தருவார்கள். பதிலுக்கு விழுந்து வணங்கமாட்டார்கள். சமவயதில் உள்ளவர்கள் ஆசி கூறாமல் பரஸ்பரம் வணக்கம் சொல்வார்கள். ஒரு அலுவலகத்தில் வயதில் சிறியவர் பெரிய பதவியில் இருந்து வயதில் பெரியவர் அவர் கீழே இருந்தால் இந்த வயது சம்பிரதாயம் எல்லாம் கிடையாது பதவி அந்தஸ்து மட்டுமே அங்கு பார்க்கப்பட்டு யாரை யார் வணங்குவது என்பது நடைபெறும்.
வசிஷ்டர் பிரம்ம ரிஷி. அவரை விஸ்வாமித்திரர் வணங்க பதிலுக்கு வசிஷ்டர் ஆசிகூற தனக்கு இன்னமும் ஞானம் வரவில்லை போலிருக்கின்றது என்று கோபம் கொண்டாலும் மீண்டும் கானகம் சென்று தன் தவத்தைத் தொடர்ந்தார்.
பலநாட்களுக்குப்பின் அவர் குலதெய்வம் அவர் கனவில் தோன்றி உனக்கு ஞானம் வந்துவிட்டது, நீ தவம் புரிந்தது போதும். நீ இப்போது வசிஷ்டரை வணங்கு. இம்முறை அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்துவார். அப்படி அவர் செய்யவில்லையெனில் அவர் சிரசு சுக்கு நூறாக உடைய சாபம் கொடு என்றது. அதன்படி காட்டிலிருந்து சென்று வசிஷ்டரைப் பார்த்தார். வணக்கம் சொன்னார்.
பதிலுக்கு வசிஷ்டர் வணக்கம் சொல்லாமல் ஆசிதர கைகளை உயர்த்தியதும் விசுவாமித்திரருக்கு கோபம் மூண்டது. முதன் முறை திரும்பி சென்று விட்டேன். இம்முறை எனக்கு பிரம்ம ஞானம் பூரணமாக ஏற்பட்டிருந்தும் இவர் அதை அங்கீகரிக்கவில்லை. குலதெய்வம் கூறியதுபோல் செய்து விடலாமா என்று கோபத்துடன் நினைத்தவருக்கு வேரொன்றும் தோன்றியது.
குலதெய்வம் இம்முறை வசிஷ்டர் வணக்கம் செலுத்துவார் என்றதே என எண்ணி மீண்டும் வணங்க நினைத்தவருக்கு நமக்கு ஏன் இந்த கோபம் வருகின்றது? இவ்வளவு தவம் செய்து என்ன பயன். பிரம்ம ஞானம் பெற்றிருந்தால் இந்த கோபம் தலைக் காட்டியிருக்காதே. அப்படியானால் தாம் இன்னமும் தவம் புரியவேண்டும் என நினைத்து ஒன்றும் பேசாமல் திரும்பி ஓர் அடி எடுத்துவைத்தார்.
அப்போது முனிவரே சற்று நில்லுங்கள். நீங்கள் என்னை வணங்கினீர்கள். பிரம்ம ஞானம் பெற்ற தங்களை நான் வணங்க வேண்டாமா? என்று வசிஷ்டர் கூறியது ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது. வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி என அழைக்கப்பட்டார் விசுவாமித்திரர்.
கோபத்தை அடக்கவில்லையென்றால் என்னதான் தவமிருந்தாலும் சாஸ்திரம் கற்றிருந்தாலும் பயன் ஏதுமில்லை. ஞானம் கைகூடாது. ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது.

வியாழக்கிழமை, 12 November 2015 03:11

தானத்தின் மதிப்பு- அறியாமை!

தானத்தின் மதிப்பு- அறியாமை!
நாட்டின் எல்லையில் வலம் வந்து கொண்டிருந்த மன்னர் ஓர் விறகு வெட்டி மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவனிடம் சென்று யார் அனுமதியில் இம்மரத்தை நீ வெட்டிக்கொண்டிருக்கின்றாய் என்றார். இதுவரை மரம் வெட்ட யாரிடமும் நான் அனுமதி பெற்றதில்லை. அப்படி ஒன்று இருப்பதும் எனக்குத்தெரியாது. இதைக் கொண்டுதான் நானும் என் குடும்பமும் கஞ்சி குடிக்கின்றோம் என்றான். மன்னன். நீ அனுமதியில்லாமல் மரம் வெட்டுவது சட்டப்படி குற்றம். இருந்தாலும் உன்னை நான் மன்னித்து விட்டேன். இன்று முதல் அருகில் இருக்கும் காடு முழுவதையும் உனக்குத் தானமாகத் தருகின்றேன். அதை வைத்து நீயும் உன் குடும்பமும் நான்றாக வாழுங்கள் எனக் கூறிச் சென்றான். சில நாட்களுக்குப் பிறகு அந்த விறகு வெட்டி எப்படி இருக்கின்றான் என்றறிய அங்கு வந்த மன்னன் திடுக்கிட்டான். அந்தக் காட்டையே காணவில்லை. விறகுவெட்டியை சந்தித்தபோது இப்போது நாங்கள் அரைவயிறு கஞ்சி குடிக்கின்றோம் என்றான். விபரம் கேட்டவர் அதிர்ந்தார். சந்தனமரக் காட்டின் அருமை தெரியா அந்த விறகு வெட்டி அந்தக் காட்டைக் கொழுத்தி கரியாக்கி விற்று வாழ்ந்திருந்தான். தானம் தரும் பொருளின் மதிப்பை அறியாதவனுக்கு தானம் தருவதில் பயனில்லை.

வியாழக்கிழமை, 12 November 2015 03:07

அருட்பார்வை!

அருட்பார்வை!
நாரதருக்கு ஞானிகளின் அருட் பார்வைக்கு பலன் உண்டா என்ற சந்தேகம்வர அவர் கிருஷ்ணனிடம் கேட்டார். பரமாத்மா கிழக்குத் திசையில் ஓர் குப்பைமேடு இருக்கின்றது அங்கு ஓர் புழு இருக்கின்றது அதனிடம் கேள் என்றார். நாரதர் அவ்விடம் சென்று குப்பை மேட்டில் உள்ள புழுவைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே அந்தப் புழு ஒரு துள்ளுதுள்ளி கீழே விழுந்து இறந்தது. வருத்தத்துடன் கிருஷ்ணரிடம் இதைக் கூற அவர் அப்படியானால் மேற்குத் திசையில் கோவில் கோபுரத்தில் வசிக்கும் புறாவினைக் கேள் என்றார். நாரதர் ஆவலுடன் அப்புறாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே புறா தன் சிறகைப் படபடத்து நாரதரின் பாதங்களில் விழுந்து உயிரை விட்டது. தன் கேள்வி இரண்டு உயிர்களைப் பழிவாங்கிவிட்டதே என்று மிகவும் வேதனையுடன் கிருஷ்ணரிடம் சென்று நடந்ததைக் கூறினார். சரி, இந்தமுறை நீ வடக்குத் திசையில் ஓர் வீட்டில் அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. நீ அதனிடம் சென்று கேள். முன்பு நடந்ததுபோல் இம்முறை நடக்காது என ஆறுதல் சொல்லி அனுப்பினார். நாரதர் அந்த வீட்டை அடைந்தார். அந்தக் குழந்தையைப் பார்த்து தன் கேள்விதனை தயக்கத்துடன் கேட்டார்.
அந்தக் குழந்தை சொல்லியது. தேவரிஷியே! குப்பைமேட்டில் புழுவாக இருந்த என்னை தங்களின் அருபார்வையால் புறாவாக்கினீர்கள். புறாவான எனக்கு மீண்டும் தரிசனம் தந்து உயர்குலத்தில் பிறக்க வைத்தீர்கள். தற்போது மீண்டும் எனக்கு நீங்கள் நேத்திர தீட்சை அளித்து என்னை தேவனாக்கியுள்ளீர்கள். இந்த 3 பிறவிகளிலும் தங்களின் அருளே எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்னை வாழ்த்தி விடைகொடுங்கள் என தேவலோகம் சென்றது. நாரதர் புரிந்து தெளிந்தார்.

வியாழக்கிழமை, 12 November 2015 03:05

முதல் ஒளி

முதல் ஒளி:
தனக்குப்பிறகு பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவெடுக்க தன் மகன்கள் மூவரையும் அழைத்து முடிந்த இந்த ஆண்டில் நீங்கள் செய்த சிறப்பான காரியம் எது எனக்கேட்டார்.
முதல்வன் சொன்னான். அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தர் தீர்த்த யாத்திரை செல்ல இருப்பதால் தன்னிடமுள்ள இரத்தினங்கள், நகைகளை பாதுகாப்பாக வைத்திரு என என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து கேட்டபோது அவர் எந்தக் கணக்கும் வைத்துக் கொள்ளாத நிலையில் முழுவதுமாக கொடுத்துவிட்டேன் என்றான்.
தந்தை சொன்னார் நீ செய்தது நல்ல காரியம்தான். உண்மையில் நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் குற்ற உணர்ச்சியும் அவமானமும் உன் மனதினுள் படிந்திருக்கும். அதிலிருந்து தப்பிக்கவே நீ அப்படியே திருப்பிக் கொடுத்துள்ளாய். இது உன்னைபற்றி சிந்தித்தல் ஆகும். ஆனால் சுயநலமற்ற செயலாகாது என்றார்.
இரண்டாமவன் சொன்னான். ஒருநாள் ஏரிக்கரையோரம் செல்லும்போது நீரில் மூழ்கியவாறு ஒருவன் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவசரமாக சென்று கொண்டிருந்த நான் ஏரியில் குதித்து அவனைக் காப்பாற்றினேன் என்றான். தந்தை சொன்னார் இதுவும் நல்ல செயலே. ஆனால் அவன் கூக்குரலை நீ அலட்சியம் செய்து விட்டிருந்தாயானால் அந்த மரண ஓலம் உன் வாழ்நாள் முழுவதும் எதிரொலிக்கும். அந்த அச்சத்திலிருந்து மீளவே நீ அவனைக் காப்பாற்றியுள்ளாய். இதனை ஒருபெரிய சுயநலமற்ற செயல் என நினைத்துக் கொள்ளவேண்டாம் என்றார்.
மூன்றாமவன் சொன்னான். காட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது பாறை விளிம்பில் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். சற்று புரண்டாலும் கீழே விழுந்துவிடுவான். அருகில் மெதுவாக சென்று பார்த்தபோது அது என்னுடைய பரம விரோதியாயிருக்கக் கண்டேன். மிகுந்த எச்சரிக்கையுடன் அருகில் சென்று அவனைக் காப்பாற்றினேன். தற்கொலை செய்துகொள்ள அங்கு வந்தவன் அசதியில் சிறிது படுத்திருந்திருக்கின்றான். அதை நான் கொடுத்துவிட்டதாக கூறினான். இதைக் கேட்ட தந்தை சொன்னார். இது நல்ல செயல்தான். ஆனால் பிறர் நலம் பேணும் செயல் இல்லை. எதிரி என்று தெரிந்தும் காப்பாற்றியதன் மூலம் உன் அகந்தையை வளர்த்துக் கொண்டாய். சொல்லும்போது கண்களில் பிரகாசம் தென்பட்டது. உன் மார்பு விம்மிப் புடைத்தது. நுட்பமான வழியில் ஆணவத்தை அதிகப்படுத்தியுள்ளாய்.
நீங்கள் மூவரும் செய்த எதுவும் மேலானதாக தெரியவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைக்கின்றீகள் உண்மையில் அப்படி ஏதுமில்லை. உங்களின் ஆணவ எண்ணத்திற்கு ஏற்றபடி சேவை என்ற பெயரில் உங்களுக்கு பெயர் வரும்படியாக ஒருவித சுரண்டலைச் செய்கின்றீர்கள். உங்களுக்குச் சொந்தமானது என்று எதுவும் கிடையாது. உயிர் ஒன்றுமட்டுமே உடலுக்குச் சொந்தம். மற்ற அனைத்தும் உடலுக்கு புறம்பானவை. அன்னியமானது என்ற பிணைப்பை உடைத்தெரியும் போதுதான் உங்கள் உள்ளத்தில் மாற்றத்திற்கான முதல் ஒளி இறை ஒளி கீற்றாகத் தெரியும்.

சனிக்கிழமை, 29 August 2015 12:19

நிம்மதி தேடி!

நிம்மதி தேடி!

உலகின் நிறையபேர் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் நிம்மதியின்றி வறியவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட செல்வந்தன் ஒருவன் தான் சந்தித்த ஞானியிடம் தன் நிம்மதியில்லா நிலையைச் சொன்னான். ஞானி அவனிடம் உன்னிடம் உள்ள நகை, பணம் அனைத்தையும் மூட்டைக் கட்டி கொண்டுவா. அதன் தோஷத்தைப் போக்கலாம் என்றார்.
ஒருநாள் தன்னிடமிருந்த விலையுயர்ந்த அணிகலன்கள், ஆடை ஆபரணங்கள் பணம் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக்கொண்டு ஞானி இருக்குமிடம் வந்து சேர்ந்தான். அதை அவர்முன் வைத்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானி திடீரென்று மூட்டையை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தன் பதற்றமடைந்து தொடர்ந்து ஓடினான்.
ஞானி தன்னிடமுள்ள சக்தியால் நீண்டதூரம் ஓடலானார். மூச்சிரைக்க அவனும் பின் தொடர்ந்தான். இறுதியில் புறப்பட்ட இடத்திற்கே வந்தார் ஞானி. மூட்டையை கீழே வைத்தார். பின்னால் ஓடிவந்த செல்வந்தனும் மூட்டையை கைப்பற்றி தன் சுவாசத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.
ஞானி சொன்னார். நீ கையில் வைத்திருக்கும் சொல்வம் முதலிலும் இப்போதும் உன்னிடம்தான் இருக்கின்றது. அப்போது இல்லாத சந்தோஷம், நிம்மதி இப்போது எப்படி வந்தது? ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள் நிம்மதி உன்னிடம்தான் இருக்கின்றது. வேறு எங்கும் இல்லை. அதை தேடி அலைய வேண்டியதில்லை. உன் செயல்கள் தான் அதை உனக்கு கொடுக்கும் என்றார். செல்வந்தருக்கு புரிந்தது போல் இருந்தது. உங்களுக்குப் புரிந்ததா!

சனிக்கிழமை, 29 August 2015 12:15

அனுபவம் பாடம். அது தீர்வல்ல!

அனுபவம் பாடம். அது தீர்வல்ல!

மழையின்று எங்கும் வறட்சி காணப்பட்டது. போதிய உணவு இல்லாமையால் மிருகங்கள் பல இறந்தன. சிங்கம், நரி, ஓநாய் மூன்றுமட்டும் மிஞ்சியிருந்தன. ஒன்றாக அலைந்து காட்டில் இறந்து கிடக்கும் விலங்குகளின் உடலைத் தேடிக்கண்டு உண்டுவந்தன. அதற்கும் தட்டுப்பாடு வந்தது.
காட்டில் உணவுக்காக தேடியலைந்தவைகள் ஒரு முயல் இறந்து கிடந்ததை பார்த்தன். சிங்கம் ஒநாயைப்பார்த்து இந்த முயலை நம் மூவருக்கும் பங்கிடு என்றது. ஒநாய் எல்லோரும் சமம் என நினைத்து மூன்று பங்காகப் பிரித்தது. சிங்கம் கோபத்தின் உச்சத்தை அடைந்து, நானும் நீயும் ஒன்றா, உனக்கும் எனக்கும் சமபங்கா, இதை இப்படியே விட்டால் சரியாகாது, இதற்கு தீர்வு என ஓநாய்மேல் பாய்ந்து கடித்து குதறி உண்டது. சிங்கம் உண்டது போக மீதியிருந்ததை நரி உண்டது.
நாட்கள் நகர்ந்தன. மிகவும் சிரமப்பட்டு இரைத் தேடிக் கண்டுபிடித்து உண்டன. ஒருநாள் வழியில் இறந்து கிடந்த மிருக உடலைக்கண்டு சிங்கம், நரியிடம் அதை பங்குபோடச் சொல்லியது. நரி விலங்கின் உடலை ஒருபங்காகவும் வாலை ஒருபங்காகவும் செய்து வால் தனக்கு போதும் என்றது. ஆச்சரியப்பட்ட சிங்கம் நரியைப் பார்த்துச் சொன்னது இப்படி பங்குபோட எங்கு கற்றாய் என்றது. அதற்கு நரி சொன்னது அன்று இறந்த ஓநாய் சொல்லித்தந்த பாடம் இது என்றது.
அந்த அனுபவம் நரிக்குப் புரிந்தது. அனுபவம் என்பது ஓர் பாடம். அதிலிருந்து உனக்கு தேவையானதைப் புரிந்து கொள். அது உனக்கு தீர்வல்ல. ஓர் எச்சரிக்கை.

சனிக்கிழமை, 29 August 2015 12:10

மனதின் சுமை!

மனதின் சுமை!
வாழ்வின் பிரச்சனைகளில் சிக்குண்டு அவதிப்பட்ட செல்வந்தர் ஒருவர் ஞானி ஒருவரைச் சந்தித்து தன் துயர் பற்றிக் கூறினார். ஞானி அவரிடம் ஓர் பூனையை வளர்க்கச் சொன்னார். தன் துயரங்களுக்கு பூனை வளர்த்தல் எப்படி தீர்வாகும் என்று நினைத்தாலும் ஞானியின் பேச்சைத் தட்டமுடியாமல் ஒரு பூனையை வளர்த்தார்.
பூனை அவர் இல்லத்தில் சுற்றி வர அதை வேடிக்கைப் பார்த்தார். சில நாட்களில் வீட்டைச் சுற்றி உலாவிய எலிகளையெல்லாம் பூனை பிடித்து அதன் உணவாக்கிக்கொண்டது. எலிகளை வேட்டையாடிய பூனையின் செயல் அவருக்கு சந்தோஷம் அளித்தது.
எலிகள் எல்லாம் வேட்டையாடியபின் ஒருநாள் பூனை அவர் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளியை பதம் பார்த்தது. கோபம், ஆத்திரம், வருத்தம் எல்லாம் ஏற்பட பூனையை விரட்டிவிடலாமா என நினைத்தவருக்கு ஒருமாதம் கழித்து ஞானி வரச்சொன்னதற்கு இன்னும் சில நாட்களே இருந்ததால் பூனையை விரட்டும் எண்ணத்தைக் கைவிட்டார்.
அதற்குள் பூனை வெளியிடங்களில் சுற்றி கிடைத்ததைக் கடித்து வந்தது. அது என்னவோ செய்துவிட்டுப் போகிறது. எங்கோ என்னவோ செய்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என நினைத்தார்.
பூனை வளர்க்க ஆரம்பித்து இன்றுடன் ஒருமாதம் ஆகிறது. நம் துயரங்கள் ஏதும் தீர்ந்தபாடில்லை. ஆனால் முதலில் பூனை எலிகளை வேட்டையாடும்போது மகிழ்வாக இருந்தது. அதுவே கிளியை வேட்டையாடியபோது வருத்தமுற்றது. வெளியில் எதையோ வேட்டையாடியபோது மனதில் ஒன்றும் தோன்றவில்லை என்பதை நினைத்தார்.
எலிகள் நமக்கு சொந்தமில்லாதவை. அவைகள் அழிந்தபோது மகிழ்வு தோன்றியது. கிளி சொந்தமானது அழிந்தபோது வருத்தம் தோன்றியது. சம்பந்தமில்லா ஒன்று அழியும்போது ஒன்றுமே தோன்றவில்லை. எதை நம்முடையது என நினைக்கின்றோமோ அதெல்லாம் மனதை பாதிக்கின்றது, நமக்கு சொந்தமில்லாதது மனதை பாதிப்பதில்லை, என்ற சிந்தனை தோன்றவே அவரது மனதில் இருந்த துயரங்கள் தீர்ந்து விட்டதை உணர்ந்தார். ஞானிக்கு நன்றி தெரிவித்தார்.

சனிக்கிழமை, 29 August 2015 12:05

மைனாவின் நன்றி!

மைனாவின் நன்றி!

ஒரு காட்டில் மானைத்துரத்திய வேடன் விஷம் தோய்ந்த அம்பினை எய்த மான் தன் வேகத்தால் தப்பிக்க அம்பு அருகில் இருந்த மரத்தில் பாய்ந்தது. விஷம் தோய்ந்திருந்ததனால் மரம் நாளடைவில் பட்டுப் போக ஆரம்பித்தது. 
அந்த மரத்தில் ஒரு மைனா பல காலமாக வசித்து வந்தது. அதன் முன்னோர்களும் அங்கு வசித்து இருந்துள்ளனர். தாங்கள் பரம்பரையாக தங்கியிருந்த மரத்தின் நிலையைக் கண்டு மைனா மிகவும் வருந்தியது. வேறு இடம் தேடிச் சென்று வாழ அதற்குப் பிடிக்க வில்லை. பறவையாக இருந்தாலும் அதன் பழகிய விசுவாசம் மாற்றத்தை ஏற்க வில்லை.
வான்வழி சென்ற தேவேந்திரன், மரம் சுகப்பட்டபோது தானும் சுகப்பட்டு, மரம் துயரப்படும்போது தானும் துயரப்படும் மைனாவின் நேயம் மிகவும் பிடித்திருக்க அதனிடம் வினவினான். நீ ஏன் வேறு இடம் செல்லக்கூடாது என்று. நல்ல குணநலன்கள் கொண்ட இந்த மரம்தான் எனது பிறப்பிடம். எனக்கு சுவையான கனிகள் கொடுத்து, எதிரிகளிடமிருந்து என்னைப் பாதுகாத்து இதன் நிழலில் இருந்துவந்த நான் அதற்கு கெட்ட நிலை வந்ததும் ஓடி ஒளிந்து கொள்வது தர்மம் இல்லை என நான் நினைகின்றபடியால் இங்கே இருக்கின்றேன் என்றது.
தேவேந்திரன் உணர்வு பூர்ணமாக சிலிர்த்து மைனாவே உனக்கு வேண்டியது என்ன? என்றபோது இந்த மரம் பழையபடி செழித்து வளர வேண்டும் என்றது. அப்படியே தேவேந்திரன் அருள்புரிய மரம் செழிப்படைந்தது. தன் பெற்றோர்கள் தான் தனக்குப்பின் தன் வாரிசுகள் என எல்லோருக்கும் புகலிடமான மரம் பூத்துக் குலுங்க கண்ட மைனாவின் ஆனந்தம் அளவிட முடியாததாயிற்று.
உங்களை வளர்த்தவர்களை, உங்களுக்கு உதவி செய்தவர்களை மறவாமல் நீங்கள் இருக்கின்றீர்களா? சற்றே சிந்தனை வயப்படுங்கள்.

வியாழக்கிழமை, 20 August 2015 16:08

மனத் திருப்தி!

மனத் திருப்தி!
தனக்கு ஓர் சிலை வேண்டும் என்பதற்காக சிற்பியிடம் சென்றான். அப்போது சிற்பி ஒர் சிலை செதுக்கிக் கொண்டிருந்தான். அருகில் அவன் செதுக்குவது போன்றே இன்னொரு சிலை இருந்தது. அதைப் பார்த்தவர் ஏன் ஒன்றுபோல் இரண்டு சிலைகள் எனக் கேட்க சிற்பி சொன்னான். முதல் சிலை முகத்தில் சிறிது பின்னமாகிவிட்டது அதற்காக வேறு ஓன்றை செய்கின்றேன் என்றான். அவனிடம் தொடர்ந்து பேசியவர் அந்த சிற்பம் உயரமான ஓர் இடத்தில் வைக்கப்பட இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு அவ்வளவு உயரத்தில் இந்த சிறு பின்னம் தெரியவா போகின்றது எனக் கேட்டான். அப்போது அந்த சிற்பி அவ்வளவு உயரத்தில் அந்தக் குற்றம் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பக்கம் வரும்போதும் இதேமாதிரி இன்னும் சிலைகள் செய்யும் போது எல்லாம் எனக்கு இந்த குறைதான் நினைவிற்கு வரும். குறையுடன் சிலை செய்து கொடுத்துவிட்டோமே என் எண்ணம் தோன்றிக் கொண்டேயிருக்கும். அது போன்ற மன உறுத்தலுடன் என்னால் சிலைகள் செய்ய முடியாது. ஆகவே மன உறுத்தலின்றி திருப்தியுடன் சிலை வடிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை என்றான். எந்த செயல் செய்தாலும் அதில் திருப்தி இருந்தால்தான் அது சிறப்பான விளைவுகளைக் கொடுக்கும். அதி அற்புதமான விஷயம் மனத் திருப்தி!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27100154
All
27100154
Your IP: 3.133.141.6
2024-04-28 01:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg